தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ஏ.என்.பி மஹாலில் 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் ஏ. அப்துல் மாலிக் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஏ. முகமது இல்யாஸ், எஸ்.எம்.ஏ. சாகுல் ஹமீது, எம்.ஹாஜா மைதீன், எம்.முகமது சேக் ராவுத்தர், மற்றும் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமத், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.நசுருதீன் சாலிஹ் மற்றும் ஐ.எம்.பாரூக், மகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மமக மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை ஐ.எம். பாதுஷா, இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில துணை செயலாளர் திருச்சி எம்.முஹம்மது ரபீக், மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் வழக்கறிஞர் எல். தீன் முஹம்மத் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர்.
மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாவட்ட பொதுக்குழுவில் கேடயம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் பொதுக்குழுவில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக-மமக தலைவராக மதுக்கூர் ஏ. ஃபவாஸ் கான், தமுமுக மாவட்ட செயலாளராக அதிரை ஏ.அப்துல் மாலிக், மமக மாவட்ட செயலாளராக மல்லிப்பட்டினம் எம். அப்துல் ஃபஹத், தமுமுக-மமக மாவட்ட பொருளாளராக பட்டுக்கோட்டை எச். ஜெகபர் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் :
- தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெரு, காயிதே மில்லத் நகர், நொண்டி தோப்பு ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள பகுதிகளை சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் இணைக்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு மூலம் வலியுறுத்துகிறோம்.
- மல்லிப்பட்டினம்,ஷாபி இமாம் தெரு-புதுமணைத்தெரு இடையே உள்ள பகுதிகளில் குளங்களில் தேங்கியுள்ள குப்பையை அகற்றி, பூங்கா அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
- மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலைகளில் தெருவிளக்குகள் எரியாமல் இருட்டாக இருப்பதால் இதனை சரி செய்திட வேண்டும்.
- அதிராம்பட்டினத்தை தலைமை இடமாக கொண்டு புதிய வட்டாரத் தலைநகரம் (தாலுகா) அமைத்து அறிவிக்க வேண்டும் என பொதுக்குழு வலியுறுத்துகிறது.
- அதிராம்பட்டினத்தின் நீண்ட நாள் கோரிக்கையான தீயணைப்பு நிலையம் அமைத்து தரவேண்டும் என இந்த பொதுக்குழு வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
- அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24மணி நேர மருத்துவரை உடனடியாக நியமிக்க பொதுக்குழு வலியுறுத்துகிறது.
- பட்டுக்கோட்டை மக்களின் நீண்டநாள் கோரக்கையான பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற இந்த பொதுக்குழு வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
- பட்டுக்கோட்டையில் அரசு சட்டக்கல்லூரி அமைத்திட இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.
- பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- மதுக்கூரில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி 24 மணிநேர செயல்பட வேண்டுமாய் வலியுறுத்துகிறது.
- மதுக்கூரில் பல வருடங்களாக பயன்பாட்டில் இருந்த வாழிப்பாதை சில தினங்களாக பயன்பாட்டில் இல்லை, இதனால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே அனைத்து வாகனங்களும் ஒரு வழிப்பாதையில் இயங்க வேண்டும்.
- மதுக்கூர் இடையக்காட்டில் அமைந்துள்ள பால் கொள்முதல் நிலையம், பொதுமக்களுக்கு இடையூறாகவும், தொற்று நோய் ஏற்படும் அபாய சூழல் இருந்து வருகிறது, ஆதலால் அதனை வேறு இடத்திற்கு மாற்றி தரவேண்டும் என இந்த பொதுக்குழு வாயிலாக வேண்டுகிறோம்.
இறுதியாக புதிய மமக மாவட்ட செயலாளர் எம். அப்துல் ஃபஹத் நன்றியுரையாற்றினார். இதில் தமுமுக-மமக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.