மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக திமுக கூட்டணி கட்சிகள் 40க்கு 40 என வெற்றி வாகை சூடியுள்ளார்கள்.
அதன்படி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ஏணி சின்னத்தில் நவாஸ்கனி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் வெற்றியை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் நவாஸ் கனி வெற்றி பெற்றதை போல கேரள மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் தஞ்சை மாவட்ட முஸ்லீம் லீக் தலைவர் ஏ எம் அப்துல் காதர் அவர்கள்.
வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பபட்டுள்ள தமது வாழ்த்து செய்தியில் கடந்த ஐந்தாண்டுகளை போல இன்னும் சிறப்பாக நாடாளுமன்றத்தில் கடமையாற்ற வேண்டும் என்றும் ,சமூகத்திற்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அதற்காக சமூகத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்திட வாழ்த்துவதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார்.