நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைபற்றி திமுக கூட்டணி வெற்றிபெற்றது. இதனையடுத்து தொகுதிவாரியாக வெற்றிபெற்ற மக்களவை உறுப்பினர்களுடன் மாவட்ட, நகர, ஒன்றிய கட்சி நிர்வாகிகளை அமைச்சரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாக தஞ்சை மக்களவை உறுப்பினர் முரசொலியும் மாவட்ட செயலாளர்கள் கா.அண்ணாதுரை, துரை சந்திரசேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
அப்போது தஞ்சாவூர் மக்களவை தொகுதியிலேயே அதிரை மேற்கு நகர கழகத்தில் தான் அதிகபட்சமாக 89.5% வாக்குகளை உதயசூரியன் பெற்றிருப்பதை அறிந்த உதயநிதி, நகர கழக பொறுப்பாளர் S.H.அஸ்லத்தை வெகுவாக பாராட்டினார். இந்நிலையில், இத்தகைய சிறப்பு வாய்ந்த அதிரைக்கு ஓர் விளையாட்டு திடலை திராவிட மாடல் அரசு அமைத்து தர வேண்டும் என்கிற கோரிக்கையையும் எம்.எல்.ஏ கா.அண்ணாதுரையின் பரிந்துரையுடன் அமைச்சர் உதயநிதியிடம் அஸ்லம் மனுவாக வழங்கினார்.