Friday, December 6, 2024

மின்னொளியில் மிதக்கும் பிலால் நகர் – கவுன்சிலரின் 4-வருட சீறிய முயற்சிக்கு வெற்றி என பொதுமக்கள் புகழாரம் !.

spot_imgspot_imgspot_imgspot_img

பிலால் நகர் 1-வது வார்டு கவுன்சிலரின்
4 வருட கால சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

பல வருடகால பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய மின்மாற்றி அமைத்து தந்த பிலால் நகர் 1வது வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் கமாலுதீனை-
வெகுவாக பாராட்டி வரும் பொதுமக்கள்!

அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலால் நகர் 1வது வார்டு பகுதியில் பல வருடங்களாக மின்சார குறைபாடு இருந்து வருவதை கருத்தில் கொண்டு பிலால் நகர் பகுதியின் கவுன்சிலராக திருமதி ஜாஸ்மின் கமாலுதீன் அவர்கள் பதவியேற்றதிலிருந்து
4- வருடங்களாக தொடர் பல்வேறு கட்ட சட்ட போராட்டங்கள் முன்னெடுத்ததாக தெரிய வருகிறது!

இது குறித்து வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் கமாலுதீன் கூறுகையில்
அதிராம்பட்டினம் மின்சார வாரியம் முதல்-
மாவட்ட ஆட்சியர் என, முதலமைச்சர் தனிப்பிரிவு உட்பட அனைவருக்கும் தொடர் கோரிக்கை மனு அளித்ததாகவும்!

மேலும் அனைத்து விதமான சட்ட முன்னெடுப்பு வேலைகளை தொடர்ந்து செய்து வருவதாகவும்

இதனிடையே (இரண்டு) முறை முதலாவதாக பொதுமக்களை திரட்டி சாலை மறியல் அறிவித்ததாகவும் அதன் பின்னர் 90% சதவீத வேலைகள் முடிவுற்று!

மின் மாற்றி மட்டும் அமைக்கப்படாமல் இருந்ததை சுட்டிக்காட்டி மீண்டும் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உதவியோடு அதிராம்பட்டினம் மின்சார வாரியத்தை கண்டித்து 20/06/2024 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்!
அதன் பின்னர், அப்பகுதியின் வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் கமாலுதீன் அவர்களை பட்டுக்கோட்டை சரக உதவி மின்செயற் பொறியாளர் அவர்கள் தொலைபேசியில் அணுகி உங்கள் பகுதிக்கு மின் மாற்றி அமைக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் அந்த கண்டன போராட்டமும் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது !

மின்சார வாரியத்தின் சார்பில் உறுதி அளித்ததின் அடிப்படையில் 20/06/2024 -லில் பிலால் நகர் (பள்ளிவாசல்) அருகே புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது!

பிலால் நகர் பகுதியில் இந்த மின் குறைபாட்டிற்கு தீர்வு கிடைப்பதற்காக தான் மேற்கொண்டு வரும் சட்டப் போராட்டத்திற்கு
தன்னுடன் சேர்ந்து நான்கு வருட காலமாக ஊராட்சி மன்ற தலைவர் திரு சக்தி, ஒன்றிய கவுன்சிலர் திரு.சுரேஷ்
இதற்கு உறுதுணையாக அதிராம்பட்டினம் காவல்துறையினர் ,மற்றும் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆகிய அனைவரும் தனக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அப்பகுதியின் வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் கமாலுதீன் கூறுகிறார்!

மேலும் இந்த புதிய மின்மாற்றி அமைப்பதன் மூலம் பிலால் நகரில் வசிக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைய உள்ளதாகவும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டிற்கும், 4- வருட கால சட்டப் போராட்டத்திற்கு தீர்வு கிடைத்தள்ளது எனவும் பிலால் நகர் 1வது வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் கமாலுதீன் பெருமிதம் !

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: எல்லாமே பூஜைக்கு அப்புறம்தான்- நீரில் மிதக்கும் பகுதியை மீட்க சாக்கு...

அதிராம்பட்டினம் தோப்புக்காடு பகுதியில் உயரமாக அமைக்கப்பட்ட தார்சாலையால் ஒரு வீட்டிற்குள் புகுந்த மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது என மனிதநேய ஜனநாயக...

மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ்...

. அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img