நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் தேசிய செயலாளர் கருப்பு முருகானந்தம் தொகுதிக்குடட்ட வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
அதன்படி நேற்று, அதிராம்பட்டினம் பகுதிக்கு வருகை தந்த கருப்பு முருகானந்தம் மக்களிடையே பேசினார் அப்போது நான் இத்தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறேன் என்றும், இருந்தாலும் தஞ்சை தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.
அதிராம்பட்டினம் மக்கள் வெகுவாக ரயில் பயணத்தை விரும்ப கூடியவர்கள் என்றும், தற்போது சென்று வர கூடிய அனைத்து ரயில்களிலும் அதிரை மக்களின் பயன்பாடு போதுமானதாக உள்ளதை சுட்டிகாட்டிய அவர், இன்னும் 6 மாத காலத்திற்குள் அதிரையில் நின்று செல்லும் வகையில் நிரந்தர தினசரி ரயிலை பெற்று தர துறை சர்ந்த அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக கூறினார்.