மரண அறிவிப்பு : ஹாஜா நகர் தண்டையார் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் I.M. முகம்மது முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் M. காதர் முகைதீன் அவர்களின் மருமகளும், மர்ஹூம் M.K. ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும், M.K. முகம்மது பாரூக் அவர்களின் காக்கா மனைவியும், I.M. இப்ராஹீம் மஸ்தான், I.M. அகமது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியும், SMA. நாசர், A. பைசல் அகமது, I.M. அப்துல் ஹக்கீம் ஆகியோரின் மாமியாவும், காவண்ணா என்கிற H. காதர் முகைதீன் அவர்களின் தாயாருமாகிய I.M. பரீதா அம்மாள் அவர்கள் நேற்று 02/07/2024 செவ்வாய்கிழமை மாலை 5:00 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (03/07/24) புதன்கிழமை லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.