தனி நபருக்காக மக்களின் அத்தியாவசிய நீராதாரத்திற்கு முட்டுக்கட்டை போட்ட அதிரை நகராட்சி !
அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாக வசதிக்காக மாநில திமுக இரண்டாக பிரித்ததில் இருந்து கிழக்கு மேற்கு என இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகிறது.
இதில் இராம குணசேகரன் கிழக்கிற்கும் முன்னாள் பேரூராட்சி தலைவர் அஸ்லம் மேற்கிற்கும் பொறுப்பாளர்களாக உள்ளனர்.
இவர்கள் இருவருக்குள்ளும் உட்கட்சி விவகாரம் உள்ளூரை தாண்டி தலைமைக்கும் பட்டவர்த்தனமாக தெரியும்.
இதுல அஸ்லம் அதிராம்பட்டினம் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார் அதோட 2வது வார்டு கவுன்சிலரின் கணவராகவும் அந்த வார்டின் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
பேரூராட்சியாக இருந்த கால கட்டத்துல கோடை காலங்கங்களில் வரண்டு போன நீர் நிலைகளை கண்டறிந்து பம்பிங் மூலமாக நீரேற்றும் முயர்ச்சியை மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி செய்து வந்தார் அஸ்லம்.
அதனடிப்படையில் தற்போது நீர் நிலைகள் எல்லாம் வறண்டு போயி உள்ளதையும், நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் நசுவினி ஆற்றில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீறை கடந்தகாலங்களை போல பம்பிங் செய்து ஊரில் உள்ள குளங்கள் குட்டைகளை நிரப்பிட வேண்டும் என நகராட்சி ஆனையர் சித்திரா சோனியாவிடம் மனுவாக கொடுக்க, அந்த அதிகாரியும் நகர் மன்ற கூட்டத்தில் ஒப்புதலுக்கு சமர்பித்திருக்கிறார்.
நகர் மன்ற கூட்டத்தில் ஏகமனதாக இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தாலும் உப்பு சப்பில்லாத காரணத்தை கூறி இந்த மகத்தான திட்டத்தை கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.
அது என்னான்னா….
மனுதாரர் கொடுத்து கோரிக்கையை ஏற்பது என்றும், ஆனால்…நீங்க சொன்ன அந்த ஏரியால போதிய பாதுகப்பு வசதியில்லாதால மோட்டார் உள்ளிட்டவைகள் திருடு போக வாய்ப்பு உள்ளது ஆதலால் இப்போதைக்கு இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாது என கூறி இருக்குதாம் நகராட்சி !
விசயம் என்னான்னா….
மேட்டர் மோட்டாரு அல்ல…
மனு கொடுத்த அந்த ஒத்த நபருக்காக ஒட்டுமொத்த மக்களின் நீராதாராத்தில் மண்ணை அள்ளி போட்டு மூடி இருக்கு நகராட்சி…
அட போங்கப்பா.. உங்க சண்டயில என்னோட தொண்ட குழி வறண்டு போச்சுன்னு புழுங்கி தள்ளுராங்க…. உடன் பிறப்புக்கள்.