மரண அறிவிப்பு : புதுக்குடி நெசவுதெருவை சேர்ந்த மர்ஹும். அப்துல் காசிம் அவர்களின் மகனும், மர்ஹும். கிராணி சேக்தாவூது அவர்களின் மருமகனும், மர்ஹும். கணக்குபிள்ளை காதர் முகைதீன், மர்ஹும். கிராணி M.S. அப்துல் ரஹீம், M.S. அப்துல் முனாப் ஆகியோரின் மச்சானும், கிராணி ரபீக் என்கிற M.S.A. சேக்காவூது அவர்களின் மாமனாரும், A.K. அப்துல் ஹாதி, A.K. சேக் நஸ்ருதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய A.K. அகமது கபீர் அவர்கள் இன்று நெசவுத்தெரு இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.