கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிரையில் திமுக மேற்கு நகர பொறுப்பாளர் S.H.அஸ்லம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான கா.அண்ணாதுரை கலந்துக்கொண்டார்.
முன்னதாக ஜாவியா நிறைவு நாளையொட்டி ஜாவியா மஜ்லிஸ் முடிந்து வெளியே வந்த ஆயிரக் கணக்கானோரை சந்தித்து கடந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
இதனையடுத்து மார்க்கெட் சாலை அருகில் திமுக கொடியை ஏற்றி வைத்து பேசிய அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே சதவீத அடிப்படையில் அதிகபட்சமாக 90% வாக்குகளை உதயசூரியனுக்கு அளித்து அதிரை மேற்கு நகர மக்கள் மகத்தான வெற்றியை பரிசளித்திருப்பதாக கூறினார். இதனால் அதிரையின் வளர்ச்சிக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் இஸ்லாமிய மக்களுக்கு எப்போதும் திமுக கடமைப் பட்டிருப்பதாகவும் கா.அண்ணாதுரை தெரிவித்தார்.
தமிழ்நாட்டிலேயே அதிரை மேற்கு நகரம் தான் நம்பர் ஒன்.! எம்.எல்.ஏ புகழாரம்..!!
More like this
அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!
2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...
ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!
இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...
அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...