அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கியது.
அதிராம்பட்டினம் மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கிய இத்தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதலாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் MFC மதுக்கூர் அணியினரும் AFFA அதிராம்பட்டினம் அணியினரும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே அதிரை AFFA அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதி ஆட்டநேர முடிவில் AFFA அதிராம்பட்டினம் அணி, 5-1 என்ற கோல் கணக்கில் MFC மதுக்கூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதிரை AFFA அணி வீரர் முஹம்மது ஆசிப், ஹாட்ரிக் கோல் அடித்து சிறப்பாக விளையாடினார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மன்சூர் FC திட்டச்சேரி அணியினரும் சவுத் பாய்ஸ் காரைக்குடி அணியினரும் மோதினர். இதில் ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் விளையாடி முடித்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் வேறு ஒரு நாள் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இன்றைய(22/07/2024) தினம் விளையாட வேண்டிய அணிகள் :
MFC மல்லிப்பட்டினம் vs வெஸ்டர்ன் FC B அதிராம்பட்டினம்
இடம் : பெரிய மருதநாயகம் மைதானம், மேலத்தெரு, அதிராம்பட்டினம்









