அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் புட்பல்ஸ்(Foot Pulse Therapy) தெரபி என்னும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று தொடங்கியுள்ளது.
அதிராம்பட்டினம் கடற்கரைத் ஜுமுஆ மஸ்ஜித் முஹல்லா நிர்வாகம், தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் புதுக்கோட்டை கம்பேனியா தைஸ் ஹெல்த்கேர் சென்டர் ஆகியன இணைந்து இந்த புட்பல்ஸ் தெரபி இலவச மருத்துவ முகாமை நடத்துகின்றனர்.
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தில் இன்று 22/07/24 திங்கட்கிழமை முதல் 05/08/24 திங்கட்கிழமை வரை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை இந்த முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.