அதிரை கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ கஞ்சா பிடிப்பட்டது – இருவர் கைது !
அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் வாகனம் ஒன்று வேகமாக வந்து கொண்டுள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது இதனை அடுத்து
காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவலர் குழு அங்கு சென்றது.
அப்போது பட்டுக்கோட்டையிலிருந்து வந்த மாருதி சிஃப்ட் காரை மறித்து சோதனை செய்தனர் அப்போது அந்த காருக்குள் 7 பண்டல்களில் சுமார் 100கிலோ கஞ்சா இருந்ததை கண்டறிந்தனர்.
இதனையடுத்து காரிலிருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பெரியார் நகரை சேர்ந்த சங்கரின் மகன் சங்கர ராஜன் பாண்டியன் (33) மற்றும் மோகனின் மகன் தவமணி (25)கைது செய்தனர் இதில் சங்கரராஜன் திருச்சி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக இருந்து பணியிடை நீக்கம் செய்தவர் ஆவார்.
அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட இந்த கஞ்சாக்களை அதிராம்பட்டினம் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரிய வந்துள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவல்துறை குழுவினரை பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர், பாராட்டினார்.