அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குறிப்பாக கற்பினி பெண்கள் அதிகளவில் இம் மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர் இங்கு மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரஙகு, யூனானி வைத்திய பிரிவு,சரும நோய் பிரிவு,மன நல ஆலோசனை பிரிவு மற்றும் பல் மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
உள் நோயாளிகள் அனுமதிக்க பட்டு தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார்கள்.
இந்த மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தரம் உயர்த்தி தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதியாக இது உள்ளதால் விபத்து மற்றும் பேரிடர் உயிர்பலியில் இருந்து காக்க பட்டுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய மருத்துவமனைகளை நாடும் நிலை உருவாகியது.
இதனால் மருத்துவமனக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர்கள் பலி போகும் பரிதாப நிலையும் உருவாகியது.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையின் CMO நியூட்டன் அவர்களின் சீறிய முயற்ச்சியினால் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு 24மணி நேரமும் செயல்பட தமிழக சுகாதார துறை அனுமதி அளித்திருக்கிறது.
இதுகுறித்து மருத்துவர் நியூட்டன் அவர்களை சந்தித்து விபரங்களை கேட்டறிந்தோம், அப்போது கூறியதாவது அதிராம்பட்டினம் நகர மக்கள் தொகைக்கு ஏற்ப சில மாற்றங்களை மாநில சுகாதார ஆணையம் சில அனுமதிகளை வழங்கி இருக்கிறது என்றும், அதில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையை தரமுயற்த்தி, அவசர மற்றும் விபத்து கால சிகிச்சை பிரிவை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக கூறிய அவர், பொதுப் பணித்துறையினரால் கட்டிடங்கள் கட்ட ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு உள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்.