தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
இதனையடுத்து 110கிலோவாட் துணை மின்நிலையம் உட்பட ரூ.50 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்து அதிரையில் மேம்பாட்டு பணிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்துள்ளது. இந்தநிலையில் எம்.எல்.ஏ கா.அண்ணாதுரையின் கோரிக்கையை ஏற்று அதிரை சாலை பணிக்கு ரூ.99லட்சமும் பேருந்து நிலைய மேம்பாட்டு பணிக்கு 1.07கோடி என மொத்தம் ரூ.2.06கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.