இந்திய தேசத்தின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நகர அலுவலகத்தில் தமுமுக-மமக நகரத் தலைவர் H. செய்யது புகாரி தலைமையில் நடைபெற்றது.
இதில் தமுமுக நகர செயலாளர் முனைவர் H. ஷேக் அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார். தமுமுக – மமக மாவட்ட துணை தலைவர் S.A இத்ரீஸ் அஹமது மற்றும் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் R.M நைனா முஹம்மத் ஆகியோர் முன்னிலையில், தமுமுக – மமக மாநில செயற்குழு உறுப்பினர் M.நஸ்ருதீன் சாலிஹ் தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்பித்தார்.
மமக மாவட்ட துணைச் செயலாளர் S.M.A சாகுல் ஹமீது சுதந்திர தின உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மமக நகர துணைச் செயலாளர் A. ஜகபர் சாதிக், தகவல் தொழில்நுட்ப அணி நகரச் செயலாளர் K. சகாபுதீன், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமுமுக நகர துணை செயலாளர் D. ஹாஜா முகைதீன் ஒருங்கிணைத்தார். இறுதியாக நகர மமக செயலாளர் S. முகமது அஸ்லாம் நன்றியரை ஆற்றினார்.