அதிராம்பட்டினம் நகராட்சியில் விதிமுறைகளுக்கு மாறாக டெண்டர் மற்றும் மக்கள் பணிகள் குறித்து பொது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.
நிர்வாக காரணங்களுக்காக கிழக்கு மேற்கு என பிரிக்கப்பட்டு மேற்கிற்கு முன்னாள் சேர்மன் SH. அஸ்லம் அவர்களை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதே போல கிழக்கிற்கு இராம குணசேகரனை திமுக தலைமை நியமித்தது.
கிழக்கு மேற்கு என பிரிக்கப்பட்ட பின்னர் நகர நிர்வாகத்திற்குள் செயல்படுத்தப்படும் மக்கள் நல பணிகள் குறித்து அந்தந்த பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆனால் நகர்ப்புற மேம்பாட்டு துறை சார்பில் சாலை மேம்பாடு பணிகளுக்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட ஆணையிடப்பட்டது.
அதன்படி ஒப்பந்த புள்ளிகள் கோரல் தொடர்பாக நாளிதழ்கள், உள்ளிட்டவற்றில் விளம்பரம் செய்து ஒப்பந்த தாரர்களிடம் விண்ணப்பங்கள் பெற வேண்டும்.
இது தவிர துறை சார்ந்த அமைச்சரின் உத்தரவுப்படி அந்தந்த பொறுப்பு பொறுப்பாளர்கள் ஆலோசனையின் படி தரம் மற்றும் ஸ்த்திரத்தன்மை கொண்ட பணியினை மேற்கொள்ள இதர ஒப்பந்த தாரர்களும் பங்கெடுக்க வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கமாகும்.
ஆனால் நகராட்சி நிர்வாகம், இந்த வழிமுறைகளை ஏதும் பின்பற்றாமல் தனி நபரின் தலையீட்டால் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு டெண்டர் கொடுத்தாக கூறப்படுகிறது.
செட்டிங் ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக மற்றொரு செட்டிங் ஒப்பந்ததாரரை நியமித்து வேறு யாரும் கலந்து கொள்ளாதபடி கிழக்கு நகரம் பார்த்து கொண்டது.
இதனை அறிந்த மேற்கு நகர பொறுப்பாளர்கள், அமைச்சரின் உத்தரவுபடி டெண்டரை நடத்த வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட டெண்டரை ரத்து செய்து வேறு ஒரு நாளில் ஒப்பன் டெண்டரை நடத்த அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
முன்னதாக, சம்பந்தப்பட்ட டெண்டர் தொடர்பாக குறிபிட்ட கால அவகாசத்திற்குள் வேறு ஒரு டெண்டரை கிழக்கு நகரம் ஏற்பாடு செய்து மூடி முத்திரையிடப்பட்ட உரையில் வைத்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வழங்கினர் ஆனால் அதனை பெற்று கொள்ள மறுத்தார் அந்த அதிகாரி.
இதனை அடுத்து ஒப்பந்த புள்ளி கோரலை விரைவு தபால் மூலமாக நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பபட்டு உள்ளன.
வேறு வழியின்றி டெண்டரை வேறு நாட்களுக்கு மாற்றி அமைத்ததாக அந்த அதிகாரி கூறினார் அதிரை நகரட்சிக்குள் நடக்கும் அத்துமீறலால் கட்டிகாக்கப்படும் திமுகவின் கோட்டைக்குள் ஓட்டை விழும் சூழலை உருவாக்கி வருவதாக உடன்பிறப்புகள புலம்பி வருவதை காண முடிகிறது.