ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சென்னை வடக்கு மண்டல செயலாளர் முகமது இஸ்மாயில் வரவேற்புரையாற்றினார். மாநில செயலாளர் ஏ.கே.கரீம் துவக்க உரை நிகழ்த்தினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வக்பு வாரிய தலைவரும், முன்னாள் அதிமுக எம்பியுமான அன்வர் ராஜா, முன்னாள் வக்பு வாரியத் தலைவரும் ஐமுமுக தலைவருமானஹைதர் அலி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் கே.எம்.சரீப், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஹாரூண் ரஷீத், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் எஸ்.என்.சிக்கந்தர், இந்திய தவ்ஹீத் ஜமாத் செயலாளர் செய்யது அலி, ஐக்கிய சமாதானப் பேரவை பொதுச்செயலாளர் மவுலவி முஜிபுர் ரஹ்மான் பாகவி, ஜமியத்துல் உலமா ஹிந்த் தலைவர் மவுலவி மன்சூர் காஸிபி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 450க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, வக்பு சட்டத் திருத்த மசோதா 2024-ஐ ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.