நாம்தமிழர் என்ற கட்சி எப்படி அசுர வேகத்தில் வளர்ந்ததோ அதே அசுர வேகத்தில் வீழ்ச்சிக்கும் சென்று கொண்டுள்ளன.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வந்த கட்சி இன்று சில சுயநல அரசியல் வாதிகளால் அதனை வீழ்ச்சிக்கு கொண்டு செல்லப்படுவது தான் வேதனையின் உச்சம்.
அதன்படி நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் சிலரின் செயல்பாடுகள் ஏகாதிபத்திய அளவிற்கு உள்ளது எனவும், இதனால் கட்சியின் முன்னோடிகளில் பலர் கட்சியை விட்டே சென்று விட்டதாக கசிய ஆரம்பித்திருக்கிறது.
திராவிடத்தை வசைப்பாடியே கட்சி வளர்க்கும் இந்த நாதக நிர்வாகிகளின் உள்ளடி வேலைகளால் வெறுக்கப்பட்டு திராவிட கட்சிகளில் தஞ்சம் புகும் நிலையை ஹுமாயூன் கபீர் உருவாக்கி வருவதாக அதிரையின் உண்மை தம்பிகள் புலம்பி வருவதை காணமுடிகிறது.
இப்படியே நிலைமை நீடிக்குமானால் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்கின்றனர் களமாடும் தம்பிகள்.
மேலும் வழக்கறிஞர் நல்லதுரை, அனைக்காடு தேவராஜ், குகன்குமார்,கந்தசாமி போன்றவர்களை கட்சியின் தலைமை அழைத்து பிரச்சினைகள் குறித்து தீர விசாரிக்க வேண்டும் எனவும் ஆனால் அதற்கான வாய்ப்பே இல்லை குறுக்கே ஹிமாயூன் கபீர் தடையாக உள்ளார் எனவும் ஹிமாயூன் சொல்வதைத்தான் சீமான் கேட்பார் என்றும் கட்சிக்காக உழைத்த நல்லவர்களை சீமான் கண்டு கொள்ளவே மாட்டார் எனவும் தற்போது நாம் தமிழர் கட்சி கார்பரேட் கம்பெனியாக மாறிவிட்டதாக தெரிவிக்கின்றனர் அதிரை தம்பிகள் !
சொல்வதில் என்னவோ உண்மை இருக்கத்தான் செய்கிறது சாதியை எதிர்க்கும் நாதக தேர்தல் காலங்களில் மட்டும் தொகுதிக்கும் ஏற்ப சாதிய பின்னணி கொண்ட வேட்பாளர்களை களம் இறக்கி தனது அக்மார்க் தமிழ் தேசியத்தை வெளிப்படுத்தி வருகிறது .