Monday, June 23, 2025

காவிரியில் கரைபுரண்டோடும் தண்ணீர் – பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவுரை!

spot_imgspot_imgspot_imgspot_img

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இஆப விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியுள்ளதாவது :

மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், அணையில் இருந்து விவசாயப் பணிகளுக்கு காவிரி ஆற்றில் 18,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் முழுமையாக செல்கிறது. கொள்ளிடம் ஆற்றில் மழைநீர் வரத்தும் உள்ளது. எனவே ஆற்றுநீரின் வேகம் அதிகமாக உள்ளது.

பொதுமக்கள் யாரும் ஆழமான நீர்நிலைப் பகுதிகளில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம்.

தங்களது கால்நடைகளை ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள இடங்களிலும், அபாயகரமான இடங்களிலும் தன் படம் (Selfie) எடுப்பதை தவிர்த்திட வேண்டும்.

இரவு நேரங்களில் ஆற்றில் இறங்குவதையும் தவிர்த்திட வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் ஆற்றில் ஆழமான பகுதியில் இறங்குவதை குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும், சில நேரங்களில் ஆறுகளில் சுழல் ஏற்பட்டு அதில் மாட்டிக்கொள்ள நேரிடும்.

மாணவர்கள் மற்றும் நீச்சல் தெரியாதவர்கள் ஆறுகளில் கவனமுடன் குளிக்க வேண்டும்.

குழந்தைகளை நீர் நிலைகளில் விளையாட செல்லாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
spot_imgspot_imgspot_imgspot_img