ரஜினியின் அரசியல் முடிவு குறித்து அரசியல் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது கருத்தினை தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர்🎙, “ரசிகர்களின் எதிர்பார்ப்பைகு ரஜினி நிறைவேற்றியுள்ளார். ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்துக்கள். ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்த சாதகமோ பாதகமோ கிடையாது. சாதகமாக இருந்தாலும் சரி பாதகமாக இருந்தாலும் சரி அதை கடந்து வரும் திறன் திமுகவுக்கு உள்ளது” என்றார் . மேலும், ரஜினியின் அரசியல் வருகைக்கு தினகரனும் ஆதரவு தெரிவித்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்து டெப்பாசிட்டனை இழந்தது . இது குறித்த விசாரணை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது . அதன்படி, ஆர்.கே.நகரில் 120க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் பொறுப்புகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 14 வட்டக் கழகங்களையும் திமுக அதிரடியாக கலைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.