ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டியில் பிரபல வீரர்களை பந்தாடிய இர்ஃபான் அலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த போட்டியில் கர்நாடக அணியின் நட்சத்திர வீரரான அஸ்வல் ராய் கலந்து கொண்டு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேன் ஆஃப் த மேட்ச் பதக்கத்தை தட்டி சென்ற அதிரையரான (K.S.M பகுருதீன் அவர்களின் மகன்) இர்ஃபான். இவரின் சாதுரியமான ஆட்டத்தால் காலிறுதியில் கர்நாடக அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது பாராட்டுதலுக்கு உரியன, அரை இறுதியில் அரேபிய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தன தமிழ் ஸ்பார்ட்டன்ஸ் அணி.
முன்னதாக தமிழக அணியில் 10 மேற்பட்ட தலை சிறந்த வீரர்கள் களத்தில் விளையாடி வருகிறார்கள்.அதில் அதிராம்பட்டினத்தின் இளைஞரான இர்ஃபான், A கிரேடு விளையாட்டு வீரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.