அதிரையில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம் .
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் பகுதியை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மகன் ECR. சாலையில் நடந்த விபத்தொன்றில் சிக்கிய சுகைல் வயது 20 படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த அவரை பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முன்னதாகவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மரணித்த சுகைலின் உடல் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு உள்ளது.