97
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை வாரசந்தை நடைபெறும்.இந்த நாட்களில் பெரும்பாலான அதிரை மற்றும் அதிரையை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் இன்னபிற பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
அப்படியிருக்கையில் இந்த பகுதிகளில் தேங்கி இருக்கும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றாததால் சுகாதர சீர்கேடுகள் உண்டாகும் அபாயம் உள்ளது.தொடர்ந்து வரி வசூல் செய்யும் பேரூராட்சி சுகாதர நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது
கவலையளிப்பதாக இங்குள்ள வியாரிகள் தெரிவிக்கின்றனர்.பேரூராட்சி கண்ணெதிரே இதுபோன்ற குப்பைகளை அகற்றாத நிர்வாகம்,தெருக்களிலா அகற்றப்போகிறார்கள் என்று புலம்புகின்றனர்.