அதிராம்பட்டினம் அருகேயுள்ள தம்பிக்கோட்டை கிராமத்தில் ஆன் குழந்தையின் சடலம் ஒன்று மிதப்பதாக அதிராம்பட்டினம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் உறவுகள் ட்ரஸ்ட் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.
பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தையை குளத்தில் வீசி சென்ற நபர் குறித்து போலிசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் குழந்தையின் உடல் முழுவதும் அழுகிய நிலையில் உள்ளதை கவனத்தில் கொண்டு உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தி நகராட்சி மயானத்தில் இந்து முறைப்படி அடக்கம் செய்ய காவல் துறை கோரியதன் அடிப்படையில் உறவுகள் ட்ரஸ்ட் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் குழந்தையின் உடலை காவல்துறை அனுமதியுடன் அடக்கம் செய்தனர்.