தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று புதன்கிழமை மாலை அதிரையை கருமேகங்கள் சூழ்ந்தன.
அதன் தொடர்ச்சியாக இரவு 7 மணிமுதல் மழை பெய்ய ஆரம்பித்தது. மிதமாக தொடங்கிய மழை, கனமழையாக இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அதிரை முழுவதும் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.