மத்திய அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் வக்ஃப் சட்டத்தை மாற்றி, அதிலே பல்வேறு திருத்தங்களை செய்து புதிய வக்ஃப் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முயற்சி செய்தது. அப்போது இந்த சட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக், இடதுசாரிகள், விசிக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
அதுமட்டுமின்றி பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளே வக்ஃப் சட்டத்தை எதிர்த்து குரல் எழுப்பினர். இதனையடுத்து வக்ஃப் சட்டம், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக்குழு, வக்ஃப் சட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது கருத்துகளை 13ம் தேதியான இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை அக்குழுவுக்கு தெரிவிக்கலாம்.
அதன்படி முஸ்லிம்களுக்கு பாதகமாக இருக்கும் இந்த வக்ஃப் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பொதுமக்கள் எளிதாக தங்கள் கருத்துகளை அனுப்பும் வகையில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இணையத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. மேலும் இதற்கென தனியாக QR code வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா சபை கேட்டுக்கொண்டுள்ளது.
QR CODE :
WEBSITE LINK :