அதிராம்பட்டினம் நகராட்சியின் 2வது வார்டு கவுன்சிலராக மேற்கு நகர திமுக பொறுப்பாளரும் முன்னாள் சேர்மனுமான S.H.அஸ்லத்தின் மனைவி சித்தி ஆயிஷா இருந்து வருகிறார். நகர்மன்ற தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே சில அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக சித்தி ஆயிஷாவின் வார்டை நகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. இந்தநிலையில், 2வது வார்டுக்கு சாலை, கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா.அண்ணாதுரையுடன் நேரில் சந்தித்து அஸ்லம் மனு அளித்துள்ளார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், விரைவாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
More like this
நெசவுத்தெரு ஜமாத் புதிய நிர்வாகத் தேர்வு – இளைஞர்களுக்கு முன்னுரிமை !
அதிராம்பட்டினம் நெசவுத்தெரு மற்றும் முஹல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு திருமணம் மற்றும் இதர காரியங்களுக்கு மா ஆதினுல் ஹசனாத் இஸ்லாமிய சங்கம் சிறப்பாக செயல்பட்டு...
அதிரை : மக்தப் மதரசா எதிரே மலைபோல் குப்பை – என்னதான்...
அதிராம்பட்டினம் மேலத்தெரு அல் பாக்கியாதுஸ் சாலிஹாத் பள்ளி வாசல் அருகே மரக்கழிவுகள், மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டர கலந்து துர்நாற்றம்...
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – அதிரையில் வெடி வெடித்து கொண்டாடிய மேற்கு...
திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும்...