கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து வந்தது. பலமுனை முயற்சிகளுக்குப் பிறகு வருகிற 02/10/2024 தேதியிலிருந்து சவுதியா விமான சேவை சென்னையிலிருந்து ஜித்தாவிற்குத் தொடங்குகிறது.அதன் சிறப்பு நிகழ்ச்சி நேற்று 23/09/2024 சவுதி அரேபியாவின் 94வது தேசிய நாள் என்பதால் சென்னை தேனாம்பேட்டையில் அமையப் பெற்றுள்ள சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நேற்று காலை 11:30 மணிக்கு கேக் வெட்டி, இனிப்பு வழங்கி சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள், அலுவலர்கள், பல்வேறு டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள், வணிகப் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர். வாரந்தோறும் திங்கள், புதன் ஆகிய இரண்டு நாட்களில் சென்னை-ஜித்தா விமான சேவை தொடக்கம் பெறுகிறது. வாரத்தில் மூன்று நாட்களாவது ஜித்தாவிற்கு இது இயக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா ஏர்லைன்ஸ்..!!
More like this
ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்ல விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
இந்தியாவில் இருந்து எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இந்தியன் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு...
காணவில்லை : அதிரை யூசுஃப்!
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப்(வயது - 48). உடல் சுகவீனம் குறைவான இவர், நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு...
காவிரியில் கரைபுரண்டோடும் தண்ணீர் – பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவுரை!
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து...