தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் அதிரை தாருத் தவ்ஹீத்(ADT) சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தர்பியா வகுப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த தர்பியா வகுப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்வில் இஸ்லாமிய பேச்சாளர் மவ்லவி.ஹுசைன் மன்பஈ கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
முதல் நிகழ்வாக தர்பியா வகுப்பு நாளை(27/09/2024) காலை சுபஹ் தொழுகைக்கு பிறகு சானாவயல் ஃபாத்திமா பள்ளிவாசளிலில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, நாளை மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு அதிராம்பட்டினம் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மைய அரங்கத்தில் “நிச்சயமாக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்” என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்த உள்ளதாகவும், பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளதாகவும் ADT சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தர்பியா வகுப்பு, ஜும்மா பேருரை மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளுமாறு ADT சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.