சாக்கடிப்பது மின்கட்டணமா மின்சாராமா என்ற தலைப்பில் SDPI கட்சியின் சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர தலைவர் அகமது இப்ராஹீம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டணி கட்சியின் நகர செயலாளர் பிச்சை உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.
கண்டன உரையாக மாவட்ட SDPI கட்சியின் தலைவர் M முகம்மது ரஹீஸ். மற்றும் SDTU தேசிய பொதுச்செயலாளர் A. முஹம்மது பாருக் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
அப்போது பேசிய ஃபாரூக் விடியல் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்டு தமிழகத்தை இருளில் வைத்து கொண்டுள்ளார்.
தேர்தல் வாக்குறுதியில் மாதாமாதம் மின் கட்டணம் என பொய்யான வாக்குறுதி என்ன ஆச்சு என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஒருமுறை பகிரங்கமாகவும் மூன்று முறை ரகசியமாகவும் மின் கட்டணத்தை உயர்த்தி வாக்களித்த மக்களின் தலையில் மிளகாய் அரைக்கிறது என கண்டனத்தை பதிவு செய்தார்.
இந்த காண்டன ஆர்பாட்டத்திற்கு அதிமுக,ஐமுமுக மற்றும் SDPI தொண்டர்கள் சார்பு அணி உறுப்பினர்கள் என நூற்று கணகக்கானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்..