சவூதி அரேபியா யான்பு பகுதியில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) யான்பு மண்டலம் சார்பில் பலத் அல்ஹிக்கி ஹோட்டலில் நேற்று(26/09/2024) வியாழக்கிழமை இரவு 8 சமூக நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருதரங்கம் IWFன் யான்பு மண்டல தலைவர் பந்தநல்லூர் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.இந்த கருதரங்கத்தை ஷபிக்குர்ரஹ்மான் கிராத் ஓதி துவங்கிவைக்க, மனித நேய மக்கள் கட்சியின் மண்டல செயலர் அடியற்கை சேக்தாவூத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மண்டல பொருளாளர் பாளை அனீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த கருதரங்கத்திற்கு மண்டல துணைத்தலைவர் ஏர்வாடி அன்சாரி, மண்டல தமுமுக செயலாளர் உடன்குடி செய்யது அபுபக்கர் சித்திக், பலத் கிளைச் பொருளாளர் ஶ்ரீவை இமாம் காதர் நியாஸ், பலத் கிளைச் செயலாளர் ராமநாதபுரம் அபூதாஹிர், டொயோட்டோ கிளை நிர்வாகிகளான கிளைத் தலைவர் கட்டிமேடு அன்புதீன், கிளைச் செயலாளர் ராமநாதபுரம் இலியாஸ், கிளை பொருளாளர் சென்னை வாஜித், கிளை துணைச் செயலாளர் சென்னை ரபீக், வி. களத்தூர் ஜியாவுல் ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த சமூக நல்லிணக்க நிகழ்விற்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது கலந்துகொண்டு தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும், இயக்கமாக திரளவேண்டிய அவசியம் குறித்தும் விரிவாக சிறப்புரையாற்றினார்.இறுதியாக, பலத் கிளை தலைவர் தஞ்சை முஹம்மது ஷாஜஹான் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிவுற்றது.யான்பு வாழ் தமிழ் மக்கள் பெருமளவு இந்த சமூக நல்லிணக்க கருத்தரங்க நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளனர்.