அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மின்சார ஒயர்களில் உராய்ந்து கொண்டிருந்த மரக்கிளைகள் கம்பங்களுக்கு இடையூறு செய்த மரங்கள் என அதிரையின் பல பகுதிகளிலும் மின் வாரிய ஊழியர்களால் வெட்டி சாய்க்கப்பட்டது.
இந்த மரக்கிளைகள் எங்கு வெட்டப்பட்டதோ அங்கேயே குவிக்கப்பட்டு கிடக்கின்றது.
குறிப்பாக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளான கடைத்தெரு பெண்கள் பள்ளி, நடுத்தெரு, மேலத்தெரு புதுமனை தெரு உள்ளிட்ட பகுதிகளில் அப்படியே கிடைக்கிறது.
தினமும் வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் அப்புறப்படுத்த கோரினால் சார் இதெல்லாம் நாங்க அள்ள கூடாதாம், நாங்க என்ன சார் பன்னுறது? என கையை விரிக்கிறார்கள்.
காதிர்முகைதீன் பெண்கள் பள்ளிக்கூடம் அருகே குவிக்கப்பட்ட மரக்கழிவுகளில் இருந்து விஷ ஜந்துக்கள் நடமாடுவதாக மாணவிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் அதிரை நகரில் கொட்டப்பட்டுள்ள மரக்கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.