அதிராம்பட்டினம் மேலத்தெரு அல் பாக்கியாதுஸ் சாலிஹாத் பள்ளி வாசல் அருகே மரக்கழிவுகள், மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டர கலந்து துர்நாற்றம் வீசுகிறது.
9-10ஆம் வார்டின் எல்லை பகுதி என்பதால் இது கவனிக்கப்படவேண்டிய படாமலேயே இருந்து வருகிறது.
கவுன்சிலர்கள் மீது நம்பிக்கை இழந்த அப்பகுதி மக்கள் குப்பை அள்ள வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் கூறினால் அதை அள்ளுவதற்கு போதுமான வண்டி வசதி இல்லை அதோடு இதனை நாங்கள் கை வைத்தால் எங்களை மேல் அதிகாரிகள் திட்டுவார்கள் என ஓப்பனாகவே கூறியதாக தெரிகிறது.
இந்த குப்பை மேட்டிற்கு நேரெதிராக மக்தப் மதரசா ஒன்றும் இயங்கி வருகிறது.
நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு என பொதுமக்களிடம் வரி வசூல்.செய்வது எதற்க்காக என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதே போல நகரின் பல பகுதிகளில் மின்வாரிய ஊழியர்களால் வெட்டப்பட்ட மரக்கிளைகள் ரோடுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
இதனால் போக்குவரத்திற்கு இடையூறாகவும் விஷ ஜந்துக்களின் புகலிடமாகவும் உள்ளன. இதுகுறித்து அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் பலனில்லை எனவே நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் மரக்கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.