அதிராம்பட்டினம் நெசவுத்தெரு மற்றும் முஹல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு திருமணம் மற்றும் இதர காரியங்களுக்கு மா ஆதினுல் ஹசனாத் இஸ்லாமிய சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த சங்கத்திற்கு புதிய நிர்வாகம் தேர்வு மற்றும் பள்ளிவாசல் முத்தவல்லி நியமனம் ஆகியவற்றை மொளலானா இதிரிஸ் தலைமையில் முஹல்லாவாசிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் தலைவராக MA.ஜெகபர் அலி நியமிக்கப்பட்டார் துணை தலைவராக சாகுல் ஹமீதும், செயலாளராக சேக் நஸ்ரூதீன் துணை செயலாளராக N ,அபுதாஹீரும் நியமிக்கப்பட்டார். பொருளாளராக பிளாட்டினம் NM. ஷேக்தாவூது உள்ளிட்டோர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இது தவிர 13 செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பள்ளிவாசல் முத்தவல்லியாக MS.முகம்மது அபூபக்கர் துணைத்தலைவராக MMS. ஜாஹீர் ஹுசைன் உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.