அதிராம்பட்டினம் ஏரிப்புரகரையில் அமைந்துள்ள அவிசோ மன நல காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதிராம்பட்டினம் தாய் டிரஸ்ட் சார்பாக சிறப்பு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு அவிசோ மன நல காப்பகத்தின் நிறுவனர் சேக் அப்துல்லா ஹஜ்ரத் தலைமை வகித்தார் அதிராம்பட்டினம் நகர தாய் டிரஸ்ட் இளைஞர்கள் முன்னிலை வகித்தனர்,
முன்னதாக மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தாய் டிரஸ்ட் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த மன நல காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது, இவர்கள் உண்டு உறைவிட பள்ளியாக செயல்படுகிறது என்றும் 24மணி நேரமும் தொடர் கண்கானிப்பில் இருந்து வருகிறார்கள்.
இவர்களின் திறனை கண்டறியும் நோக்கில் அதிராம்பட்டினம் தாய் ட்ரஸ்ட் இளைஞர்கள் சார்பில் இன்று நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பிஸ்கட் கவ்வுதல், ஓட்டப்பந்தயம், நீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் காப்பகத்தில் உள்ள அனைவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன போட்டிகள் கலந்து கொண்ட அனைவரும் தங்களின் தனித்திறனை வெளிப்படுத்தினர்.
வந்திருந்த அனைவரையும் முன்னதாக பள்ளியின் சிறப்பு ஆசிரியர்கள் வரவேற்றனர்.
தாய் ட்ரஸ்ட் சார்பில் அடிப்படை வசதிகளற்ற ஏழை குடும்பங்கள், வழிப்போக்கர்கள், உணவிற்கு கஷ்ப்படும் ஏழைகள் மருத்துவ உதவிகள்,காப்பகங்களில் வாழும் நபர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் என அனைத்தையும், மனமுவந்து தங்களால் வழங்கப்படும் உதவித்தொகைகளில் இருந்தே வழங்கி வருகிறோம்.
எனவே இந்த அறப்பணிகளில் உங்களின் பங்களிப்பும் இடம்பெற பின்வரும் தொடர்பு எண்ணை தொடர்பு கொள்க : 8695688508 / 9345178740.