அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து, பட்டுக்கோட்டை கடற்கரை காவல் படையின் ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில் குழு சென்று சம்பந்தப்பட்ட பொருள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், அது விலையுயர்ந்த போதை பொருளான மெத்தம் பேட்டமைன் எனத்தெரிய வந்தன.
இந்த போதைபொருள் எங்கிருந்து யாரால் கொண்டு வரப்பட்டது, அல்லது கடல் மார்க்கமாக இந்த வகை போதை பொருட்கள் கடத்தப்படுகின்றனவா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.