அதிராம்பட்டினம் திமுகவை நிர்வாக காரணங்களுக்காக கட்சியின் தலைமையின் உத்தரவுக்கு இணங்க கிழக்கு,மேற்கு என இரண்டாக பிரித்து கட்சி பணிகளை செய்து வருகிறார்கள் ஆனால் நாங்க அதிரை நகரை இரண்டாக பிரித்துள்ளதை ஏற்றுகொள்ள மாட்டோம் என மார்தட்டினர் கிழக்கு கழகத்தினர்.
இதனால் மாவட்ட செயலாளரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா. அண்ணாத்துரைக்கும் கிழக்கு திமுவுக்கும் உரசல் இருந்து வருகிறது.
கிழக்கு மேற்கு என பிரித்ததில் மா.செவிற்கு பங்கில்லை என்பது பங்காளிகளான கிழக்கு திமுகவினருக்கு தெரியாமல் போனதுதான் வேதனையின் உச்சம்.
சரி… விசயத்திற்கு வருவோம் நேற்று திடீரென ஒரு வாட்ஸப் விளம்பரம் ஒன்று பூதாகரமாகி அதிரை அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
அது என்னவென்றால், மேற்கு நகர பொறுப்பு குழுவிற்கு அன்சர்கான் என்பவரை நியமித்துள்ளது கட்சியின் தலைமை, ஆனால் இதனை அன்சர்கான் ஏற்றுகொள்ளாமல் தலைமையின் உத்தரவுக்கு எதிராகவே அவ்வப்போது பேசி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை திடீர் உண்ணாவிரத அறிவிப்பு ஒன்று பகிரிகளில் பறக்க வைக்கப்பட்டிருக்கிறது.
அனாமத்தான அந்த போஸ்டரில் யாருடைய நம்பரும் இடம்பெறவில்லை. அதுபோக இதுநாள் வரையிலும் கிழக்கு மேற்கு என்பதை ஏற்று கொள்ளாத கிழக்கு ஆதரவாளர்கள் மேற்கு என்ற அடைமொழியுடன் உண்ணாவிரத போஸ்டர் வெளியிட்டுள்ளது நகைப்புக்கு உரியதாக பார்க்கப்படுகிறது.
சொந்தக்கட்சிக்கு எதிராகவே களமிறங்கும் உள்ளூர் கரகாட்ட கோஷ்டிகளுக்கு அறிவாலயம்தான் அறிவுறை கூற வேண்டும் என்கின்றனர் உள்ளூர் உ.பிக்கள்.