தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தீவிரடைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தின் அநேக இடங்களில் மழை பதிவாகி வருகிறது. பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி என பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் இன்று மழை சற்று நின்று, இருண்ட வானத்துடன் குளிர் நிறைந்து ஊட்டியில் உள்ளதுபோல் வானிலை உள்ளது. இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில்(நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை) தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழை அளவு குறித்த விவரம்(மிமீ-ல்):
மதுக்கூர் – 46.8 மிமீ
அதிராம்பட்டினம் – 44 மிமீ
பட்டுக்கோட்டை – 41.5 மிமீ
ஒரத்தநாடு – 36.8 மிமீ
நெய்வாசல் தென்பாதி – 33.6 மிமீ
பேராவூரணி – 26.2 மிமீ
ஈச்சன்விடுதி – 20.2 மிமீ
வெட்டிக்காடு – 8.6 மிமீ
திருவிடைமருதூர் – 6.8 மிமீ
மஞ்சலாறு – 6.4 மிமீ
அய்யம்பேட்டை – 6 மிமீ
கும்பகோணம் – 4 மிமீ
தஞ்சாவூர் – 4 மிமீ
குருங்குளம் – 4 மிமீ