தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் வாக்காளர் அட்டை சிறப்பு முகாம் இன்று சனிக்கிழமை காலை முதலே நடைபெற்று வருகிறது. இம்முகாமில் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் புதிதாக தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துகொள்ளலாம், மேலும் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே பெயர் உள்ளவர்கள் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், இறந்தவர்கள் பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களும் செய்துகொள்ளலாம்.
இம்முகாம் அதிராம்பட்டினத்தில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட அனைத்து பள்ளிகளிலும் இன்றும், நாளையும்(சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இம்முகாமை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.