அதிராம்பட்டினத்தில் துணை மின் நிலையத்தில் நாளை 27/11/24 புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ் தரப்பில் மின்வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருந்தோம். அவர்கள் தரப்பில் கூறியதாவது :
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளைய(27/11/24 – புதன்கிழமை) தினம் அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது. அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை முடியும் வரை பராமரிப்பு பணிகள் நடைபெறாது. ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவ்வப்போது மின்நிறுத்தம் செய்யப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.