வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும் மேற்கண்ட இடங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(27/11/24) இரண்டாவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை(27/11/24) புதன்கிழமை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.