தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர உள்ளது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தீவிரமடைந்துள்ளது.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை முதலே கனமழை தொடர்ந்து பதிவாகி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில்(நேற்று காலை 8.30 மணி முதல் – இன்று காலை 8.30 மணி வரை) பதிவான மழையின் அளவு(மிமீ-ல்) :
அய்யம்பேட்டை – 92மிமீ
மதுக்கூர் – 86.4மிமீ
அதிராம்பட்டினம் – 81.4மிமீ
பட்டுக்கோட்டை – 80.5மிமீ
வெட்டிக்காடு – 77.6மிமீ
ஒரத்தநாடு – 77.5மிமீ
நெய்வாசல் தென்பாதி – 71.4மிமீ
லோயர் அணைக்கட்டு – 70.8மிமீ
மஞ்சலாறு – 70.4மிமீ
பேராவூரணி – 65.4மிமீ
திருவிடைமருதூர் – 57.2மிமீ
பாபநாசம் – 53மிமீ
குருங்குளம் – 52.5மிமீ
ஈச்சன்விடுதி – 52.4மிமீ
கும்பகோணம் – 50.6மிமீ
பூதலூர் – 48.2மிமீ
தஞ்சாவூர் – 46.3மிமீ
திருக்காட்டுப்பள்ளி – 39.4மிமீ
திருவையாறு – 35மிமீ
வல்லம் – 31மிமீ
கல்லணை – 26.8மிமீ