அதிராம்பட்டினம் தோப்புக்காடு பகுதியில் உயரமாக அமைக்கப்பட்ட தார்சாலையால் ஒரு வீட்டிற்குள் புகுந்த மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது என மனிதநேய ஜனநாயக கட்சியின் அதிரை பேரிடர் குழுவிற்கு தகவல் கிடைத்திருக்கிறது.
தகவலின் பேரில் விரைந்து சென்ற அக்குழுவினர், சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலரின் கணவர் ராஜாவை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட புகார் தொடர்பாக மஜகவினர் கூறியுள்ளனர் அப்போது இன்று மாலை 5மணிக்குள் நீரை அகற்றி தருவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் மாலை சுமார் 6 மணியளவில் நகராட்சி அலுவலகத்திலிருந்து மஜக பேரிடர் மீட்பு குழுவிற்கு போன் சென்றுள்ளன மறுமுனையில் பேசிய நபர் தாம் நகராட்சியில் இருந்து பேசுவதாகவும், தண்ணீரை உறிஞ்சும் ஜெட்ராய்டு இயந்திரம் புதிதாக வாங்கப்பட்டு உள்ள நிலையில் பூஜை போடாமல் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது என்று கூறியுள்ளனர்.
இதனால் கடுப்பான மஜக குழுவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர், முன்னதாக RI மற்றும் உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட மஜகவினர் மேற்குறிப்பிட்டுள்ள புகார் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி இருந்தனர்.
அதிகாரிகளும் இன்று மாலைக்குள் வீட்டிற்குள் புகுந்துள்ள நீரை அகற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்திருந்த நிலையில்,திடீரென பல்டியடித்த நகராட்சியை கண்டித்து மஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் நாளை காலை 6:30மணிக்குள் இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் என அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட ஜெட்ராய்டு இயந்திரத்தை பூஜை புணஸ்க்காரம் எல்லாம் போடுவது ஒருபக்கம் இருந்தாலும், மக்களே மரண குழிக்குள் செல்லும் நிலையை கவனத்தில் கொண்டு எவ்வித ஆட்சோபனையுமின்றி பணிக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையாக உள்ளன.
CMPலைனில் நீர் வராத வாய்க்காலை தூர் வாரியதில் உள்ள அக்கறையை தோப்புகாட்டில் காட்டியிருந்தால் நகராட்சிக்கு ஒரு சபாஷ் போட்டு இருக்கலாம்.