அதிரையில் சமீபகாலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகம் நிறைந்து காணப்படுகிறது. முக்கிய வீதிகளில் கூட்டமாக உலாவித் திரியும் இந்த தெரு நாய்களின் தாக்குதல் தொல்லையால் சிறுவர், சிறுமியர்கள், பெண்கள், முதியவர்கள் வெளியே சென்று வர மிகவும் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
மாலை நேரங்களில் தெருக்களில் விளையாடும் சிறுவர் சிறுமிகளை தெருவில் உலா வரும் நாய்கள் சுற்றி வளைத்து தாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.
இதுகுறித்து ஒரு சில பொதுமக்கள் பலமுறை நகராட்சிக்கு நேரில் சென்று எடுத்து கூறியும் நகராட்சி நிர்வாகத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் அதிரை, பேரூராட்சியாக இருந்த போது இது போன்ற நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் அவ்வப்போது கண்டறிந்து சரி செய்து வந்த நிலையில், தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டவுடன் இது போன்ற அடிப்படை நடவடிக்கைகளில் அதிரை நகராட்சி மெத்தனப்போக்கை கையாள்வது முகசுளிப்பை ஏற்படுத்துவதாக அதிரை மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.