அதிராம்பட்டினம் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், அவசர ஊர்தி சேவைவையை வழங்கி வருகிறது.
அதன்படி அதிராம்பட்டினம் கிளை ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவசர ஊர்தி அற்பனிப்பு விழா அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வருகிற 3ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநில தலைவர் செ. ஹைதர் அலி கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இது தவிர அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள்,சமூதாய அமைப்புகள், ஜமாத் தலைவர்கள், கிராம அமைப்புகள், இந்து,கிறிஸ்தவ அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு வாழ்த்துறை வழங்க உள்ளார்கள்.
இத வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் தாங்களும்,தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்கிறது அதிரை ஐமுமுக கிளை.