அதிராம்பட்டினம் தனியார் பள்ளியொன்றில் பயிலும் +2மாணவர்கள் நாளை காலை பள்ளிக்கு செல்வதை தவிர்த்துவிட்டு பைக் ரேசில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.
முன்னதாகவே காவல் துறையினர் கடுமையான வாகன தனிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள் கடந்த முறை நடத்திய வாகன தணிக்கையின் போது பெற்றோர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க வார்னிங் செய்யப்பட்டு வாகனங்களை விடுவித்தனனர்.
ஆனால் இம்முறை புத்தாண்டு எனும் பெயரிலோ,ஃபேர்வல்டே எனும் பெயரிலோ பைக் ரேசில் ஈடுபட்டு வாகனத்தை காவல் துறை பறிமுதல் செய்தால் பெற்றோர்கள் மீது வழக்கு பதியப்படுவதுடன், ₹25 அபராதம் 6மாதம்.சிறை உள்ளிட்டவைற்றை அனுபவிக்க நேரிடலாம்.
எனவே சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை கூறிட வேண்டும் என காவல் துறை பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு வலியுறுத்தி உள்ளது.