அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள் அப்துல் கறிம் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மேற்குறிபிடப்பட்ட வார்டின் மக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை பணிகள் குறித்த கோரிக்கையை முன் வைத்தனர்.
சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர்கள், தத்தமது வார்டுகளுக்கு உட்பட்ட முடிக்கப்பட்ட பணிகள் குறத்த தரவுகளை முன் வைத்தனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வழக்கறிஞர் சகாபுதீன், கவுன்சிலர்கள்,அலீம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு மேலத்தெரு ஜமாத்தார்கள் மாற்றுக்கட்சி அன்பர்கள் கலந்து கொண்டனர்.
