CMP லைனை சேர்ந்த மர்ஹூம் மூ.அ. ஹாஜி முகம்மது மீரா சாகிப் அவர்களின் மூத்த மகனும், மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மருமகனும், ஹாஜி சம்சுதீன், ஹாஜி ஹாஃபிழ் சேக் சலாஹுதீன், ஹாஜி அப்துல் லத்தீஃப் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி முகம்மது முஹ்சின், ஆஷிக் மௌலானா, ஆசிஃப் ஆகியோரின் மாமனாரும், முகம்மது முகைனுதீன் அவர்களின் தகப்பனாருமான ஹாஜி அப்துல் ரஜ்ஜாக் (வயது 80) அவர்கள் இன்று(13/01/25) நள்ளிரவு 1:00 மணியளவில் இஜாபா பள்ளி அருகிலுள்ள அவர்களின் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(13/01/25) லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.