தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் உள்ள டாக்டர். அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இன்று(15/01/2025) 47ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த பொங்கல் விளையாட்டு விழாவிற்கு முத்தம்மாள் தெரு பஞ்சாயத்து தலைவர் சி.தில்லைநாதன் தலைமை வகிக்க, அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் P. முருகேசன் விழாவை துவக்கி வைத்தார்.
இந்த விளையாட்டு போட்டிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்தோடு கலந்துகொண்டு பொங்கல் பண்டிகையை ஆரோக்கியமான முறையில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு நாளை(16/01/2025) இரவு 7மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.
இன்றைய தினம் நடைபெற்று வரும் இந்த பொங்கல் சிறப்பு விளையாட்டு போட்டி விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த சா.சேக்கமுத்து (முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் ஓய்வு), காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர், முன்னிலை வகித்த கிராம நிர்வாகிகள், நற்பணி மன்ற நிர்வாகிகள் & உறுப்பினர்கள், மகளிர் மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் முத்தம்மாள் தெருவாசிகளுக்கு டாக்டர். அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும் நாளை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.







