உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடி வருவதால் வாடஸ்அப் செயலி நேற்று இரவு முற்றிலுமாக முடங்கியது.
உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பட்ட மக்களாலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் மற்றும் தகவல் பரிமாற்றும் செயலி வாட்ஸ்அப் ஆகும்.
தற்போதுள்ள சூழலில் மிக முக்கியத் தகவல் பரிமாற்றும் ஊடகமாக உள்ளது. நேற்று இரவு 12 மணிக்கு உலகம் முழுவதும் வாட்ஸ்அப் திடீரென செயலிழந்து விட்டது.
வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியவர்கள், அது சென்றடையாத நிலையில், நண்பர்களின் வாட்ஸ்அப்பை சோதனை செய்துள்ளனர். அதுவும் வேலை செய்யாமல் இருந்துள்ளது.
புத்தாண்டு இரவில் பல கோடி பேர் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப்பில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு செயலிழந்தது பின்பு தெரியவந்துள்ளது.
உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. எனவே அதிக எண்ணிகையில்,பலகோடி பேர் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப்பில் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
இதனால் வாட்ஸ்அப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு உலகம் முழுவதும் சிறிது நேரம் செயலிழந்தது.
இதனால் வாட்ஸ்அப் பயனாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சுமார் அரை மணி நேரம் வாட்ஸ்அப் முடங்கிய நிலையில் பிறகு அது சீர்செய்யப்பட்டது. அதன்பின் மக்கள் புத்தாண்டு நல்வாழ்த்துகளை பரிமாறத் தொடங்கினர்.
உலகம் முழுவதுமுள்ள மக்கள், வாட்ஸ் செயல்பாடு குறித்து ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் கேள்வி எழுப்பியிருந்தனர்.